Viduthalai Viduthalai | விடுதலை விடுதலை
Helen Satya
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், யோவான் 8:36
கேளுங்கள் “விடுதலை விடுதலை” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5wvmm9FqhSfXhZzV42gXZg
Lyrics:
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்
2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே
3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே
ஆடியோ பட்டியல் கிடைக்கிறது @ https://cmedialending.in/audios/
Do you want to get spotlights on Christian Books, Videos & Audios available? To receive these spotlights (1 per day), you can follow us on CMedia Lending WhatsApp channel using this link:https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t
கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t