பதறிடாதே கலங்கிடாதே பரமன் இயேசு பாரில் உண்டே
Sung by: Rev. S. Dynesh Sudhakar of Blessing AG church Vaniyanchathiram
Blessing AG church Vaniyanchathiram YouTube channel @ https://www.youtube.com/@blessingagchurchvaniyancha6009
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10
Listen to “பதறிடாதே கலங்கிடாதே பரமன் இயேசு பாரில் உண்டே” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd77UeEGircitQI_XBfaUPlx
Lyrics:
பதறிடாதே கலங்கிடாதே
பரமன் இயேசு பாரில் உண்டே
தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
ஆண்டவரும் மறப்பாரோ
தகப்பன் பிள்ளை இரங்குவதுபோல்
அனுதினமும் இரங்குவார் – பதறி
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கி உன்னை சுமப்பாரே
வழிவிடாமல் காக்கும் தேவன்
மாசற்றோராய் நிறுத்துவார் – பதறி
ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும் மேலாய்
ஜெயமே அளிப்பவர்
அறியா எட்டா காரியங்கள்
அனுதினமும் அறிவிப்பார் – பதறி
உனக்காய் யுத்தம் செய்திடுவார்
உனக்காய் பரிந்தும் பேசுவார்
உனக்குமுன்னே அவரின் சமூகம்
உனக்காய் யாவும் செய்திடும் – பதறி
ஆடியோ பட்டியல் கிடைக்கிறது @ https://cmedialending.in/audios/
கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t